ஜப்பானில் இன்று கடும் நிலடுக்கம்
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவானது
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், சிறிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக இதே ஹோக்கய்டோ தீவில் கடந்த செப்டம்பரில் ஏற்பட்ட 6.6 நிலநடுக்கத்தால் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.