விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தின் 2-ஆவது கருப்பு பெட்டி கண்டெடுப்பு
இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து காணாமல் போன லயன் விமானத்தின் 2-ஆவது கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து காணாமல் போன லயன் விமானத்தின் 2-ஆவது கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லயன் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங்-737 மேக்ஸ் ரக விமானம் கடந்த அக்டோபரில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் மர்மமாக இருந்து வரும் நிலையில், திங்கள்கிழமை அந்த விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் கருப்புப் பெட்டி இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. இருப்பினும், இதன் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.