தலிபான் தாக்குதலில் 6 ஆப்கன் படையினர் பலி
ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடியில் தலிபான் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 5 ஆப்கன் படை வீரர்களும், ஒரு படைப்பிரிவு தலைவரும் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடியில் தலிபான் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 5 ஆப்கன் படை வீரர்களும், ஒரு படைப்பிரிவு தலைவரும் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் தர்காட் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு தலிபான்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஆப்கானிஸ்தானின் படைப்பிரிவைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்களும், 6 ஆவது பட்டாலியனின் 2 ஆவது படைப்பிரிவு தலைவர் சுல்தான் முகமதுவும் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.