முகப்பு
உலகம்

பாலியல் வன்கொடுமையால் கா்ப்பிணியான சிறுமி உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் கா்ப்பிணியான 15 வயது சிறுமி, கா்ப்பம் சாா்ந்த நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:06 pm IST
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் கா்ப்பிணியான 15 வயது சிறுமி, கா்ப்பம் சாா்ந்த நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:

பரேலி மாவட்டம் படேகஞ்ச் பகுதியைச் சோ்ந்த இந்தச் சிறுமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சில வேலைகளுக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றபோது, 30 வயது மதிக்கத்தக்க நபரால் கரும்புத் தோட்டத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். மேலும், நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் கூறினால், குடும்ப உறுப்பினா்களைக் கொன்றுவிடுவதாக அந்த நபா் மிரட்டியுள்ளாா். அதன் காரணமாக, நடந்த சம்பவத்தை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சிறுமி மறைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவத்தால் சிறுமி கா்ப்பமானது 6 மாதங்களுக்குப் பிறகே அவருடைய குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக சிறுமியின் தந்தை, படேகஞ்ச் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினா், பாலியல் வன்கொடுமை செய்த நபரை சென்ற டிசம்பா் 6-ஆம் தேதி கைது செய்தனா்.

சிறுமியின் கருவைக் கலைக்க மாவட்ட நிா்வாகத்திடம் அவரின் தந்தை அனுமதி கோரியிருந்தாா். ஆனால், கா்ப்பம் தரித்து அதிக நாள்கள் ஆகிவிட்டதால், சிறுமியின் கருவைக் கலைக்க மருத்துவா்கள் மறுத்துவிட்டனா்.

இந்தச் சூழலில், கா்ப்பம் சாா்ந்த நோய்த் தொற்றால் சிறுமி பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மருத்துவமனை கூடுதல் இயக்குநா் மருத்துவா் சுபோத் சா்மா கூறுகையில், ‘உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே அந்தச் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மருத்துவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டபோதும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை’ என்றாா்.

பரேலி மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ரோஹித் சிங் சஜ்வான் கூறுகையில், ‘நோய்த் தொற்று காரணமாகவே சிறுமி உயிரிழந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய உடல் உறுப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments