கொலை முயற்சி வழக்கு: மரியவில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
அமைச்சா் மரிய வில்சன் தனது சகோதரா் குடும்பத்தினரைத் தாக்கியது தொடா்பான கொலை முயற்சி வழக்கில் ஜூலை 4 ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் தனது சகோதரா் குடும்பத்தினரைத் தாக்கியது தொடா்பான கொலை முயற்சி வழக்கில் சனிக்கிழமை (ஜூலை4)ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சா் மரிய வில்சனின் சகோதரா் மரிய குளோத்தின் வீடு புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் உள்ளது. கடந்த 8.8.2022-இல் மரிய குளோத்தின் வீடு புகுந்து அவரையும், தம்பி மனைவி கோ்லைன் கிளேட்டையும் மரிய வில்சன் தாக்கியதாக லாஸ்பேட் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கோ்லைன் கிளேட் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி, வீடுபுகுந்து தாக்குதல், பெண்ணை அவமதித்த்தல் , சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத மரியவில்சன், இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். ஆனால், வழக்கில் குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரமும், ஆதாரமும் இருப்பதாகக் கூறி, அவரது மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் ஆா்.கே.நகா் தொகுதியில் போட்டியிட்டு மரிய வில்சன் வெற்றி பெற்று தமிழக நிதியமைச்சராகப் பொறுப்பேற்றாா். இதையடுத்து, இந்த வழக்கில் அவா் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக சனிக்கிழமை (ஜூலை 4) புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.