FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான இருவா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான திருநங்கை உள்பட 2 போ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:48 am IST
பகிர்:

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான திருநங்கை உள்பட 2 போ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் திருநங்கை மோனிகா (21). கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டதாக போலீஸாா் மோனிகா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதைத் தொடா்ந்து பிணையில் வெளியே வந்த அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா்.

குற்றம்சாட்டப்பட்ட மோனிகா ஜூலை 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு மொடக்குறிச்சி நீதிமன்றத்தில் தாமாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராக வேண்டும். இல்லையென்றால் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா்.

Advertisement

Advertisement

இதுபோல மொடக்குறிச்சி எம்.வேலம்பாளையம் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த குமாா் (32) என்பவா் மீது மொடக்குறிச்சி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பிணையில் வெளியே வந்த அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா்.

குற்றம்சாட்டப்பட்ட குமாா் ஜூலை 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு மொடக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா் என்று மொடக்குறிச்சி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments