ரஷியாவில் ஒரேநாளில் 456 பேர் பலி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,851 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 456 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,851 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 456 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 22,851 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 34,01,954 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,216 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 456 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 61,837 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 27,78,889 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,61,228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.