முகப்பு
தமிழ்நாடு

ரூ. 100 கோடி மோசடி வழக்கில் பி.டி. அரசகுமாருக்கு 3 நாள் போலீஸ் காவல்

ரூ. 100 கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் சங்கத்தலைவர் பி.டி.அரசகுமாருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல் குறித்து...

Updated On : 4 ஜூலை 2026, 7:37 am IST
பி.டி. அரசகுமார் - கோப்புப் படம்
பகிர்:

பள்ளிகள் அனுமதிக்கு ரூ. 100 கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் சங்கத்தலைவர் பி.டி.அரசகுமாரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் அரசகுமார் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP / CMDA அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அவர் உறுதியளித்தபடி, அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றிய அரசகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணைக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

மேலும், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் சிபிசிஐடி சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு வெள்ளிக்கிழமையில் விசாரணைக்கு வந்த நிலையில், பி.டி. அரசகுமாரை 3 நாள்களில் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

summary

P.T. Arasakumar remanded to 3-day police custody in Rs 100 crore fraud case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments