ஹஜ் புனித பயணத்துக்கு உள்நாட்டினர் 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சௌதி அரேபியா
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று சௌதி அரேபியா அறிவித்துள்ளது.
துபை: கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று சௌதி அரேபியா அறிவித்துள்ளது.
சௌதி அரேபியாவின் அரசு ஊடகம் மூலம், இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, வெளிநாட்டிலிருந்து ஏற்கனவே சௌதி அரேபியா சென்று வசித்து வந்த சில ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
வழக்கமாக, ஹஜ் புனித பயணத்துக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கவிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.