இலங்கை: போராட்டக்காரர்களுக்கு அரசு எச்சரிக்கை
இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூா் சென்ற அவா் தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதையடுத்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தோ்வு செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: 'உயிர் மூச்சு': இந்திய உதவிக்கு நன்றி கூறும் ரணில் விக்ரமசிங்கே
மேலும், நாடாளுமன்றத்தில் நேற்று அதிபராக முதல்முறை உரையாற்றிய ரணில், இக்கட்டான சூழலில் மருந்துகளை வழங்கிய இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததுடன் எதிர்கால திட்டம் குறித்தும் பேசினார்.
இந்நிலையில், தற்போது இலங்கை அதிபர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் உள்ள அனைத்து சட்டவிரோத கூடாரங்களையும் முகாம்களையும் நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் அகற்றி அப்பகுதியை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் கலைந்து செல்லாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.