வாட்ஸ்ஆப்பில் வருகிறது புதிய வசதி
பயனர்களின் பயன்பாட்டிற்காக புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்களின் பயன்பாட்டிற்காக புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் செயலி அவ்வப்போது புதியபுதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
அதன்படி பயனர்களின் உபயோகத்திற்காக புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | சந்திரமுகி 2 படத்தில் இணைந்த நடிகை கங்கனா ரனாவத்
கடந்த முறை வெளியான புதிய வசதியான தனக்கு தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் முறையை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை ஒருமுறை மட்டுமே வாசிக்கும் வகையிலான புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.