சினிமாவை மிஞ்சிய சம்பவம்: ஒரே நிமிடத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் திருட்டு
இங்கிலாந்தின் தென்கிழக்கு மாகாணமான எஸ்செக்ஸில் ஒரு நிமிடத்திற்குள்ளாக ரூ.7 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் தென்கிழக்கு மாகாணமான எஸ்செக்ஸில் ஒரு நிமிடத்திற்குள்ளாக ரூ.7 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஹாலிவுட் படங்களில் வங்கித்திருட்டு, கார் திருட்டு தொடர்பான திரைப்படங்கள் பிரபலமானவை. திருட்டு சம்பவங்களுக்காக கொள்ளையர்கள் போடும் திட்டங்களும், அதனை செயல்படுத்துவதில் உள்ள சவாலும் கொண்ட திரைப்படங்களுக்கு தனி ரசிகர்களே உள்ளனர் எனலாம்.
இதையும் படிக்க | கால்பந்து தோல்வி: நெய்மரை சமாதானம் செய்த குரோஷியா வீரரின் மகன்
Advertisement
Advertisement
இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி இத்தகைய ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இங்கிலாந்தின் தென்கிழக்கு மாகாணமான எஸ்செக்ஸில் உள்ள பல்பன் தொழிற்பூங்காவில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்கள் திருடப்பட்டுள்ளன.
இந்திய ரூபாயில் 7 கோடி மதிப்பிலான மொத்தம் 5 சொகுசு கார்களை வெறும் ஒரு நிமிடத்திற்குள் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.