சீனாவில் கனமழை: 11 பேர் பலி, 27 பேர் மாயம்!
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 27 பேர் காணாமல்போயுள்ளனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 27 பேர் காணாமல்போயுள்ளனர்.
கடந்த சில நாள்களாக சீனாவில் கனமழை பெய்து வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
படிக்க: ஆகஸ்ட் மாத பலன்கள் ( மேஷம் - கன்னி)
Advertisement
Advertisement
வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அங்குள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொதுவாக இந்த மாதத்தில் வறன்ட காலநிலை நிலவும். ஆனால், இந்தாண்டு இயல்பை விட மழையின் அளவு அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக சீனாவின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 27 பேர் காணமல்போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.