முகப்பு
உலகம்

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

பாலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

Updated On : 29 ஜூன் 2025, 10:12 pm IST
காஸா நகரில் உறவுகளைப் பறிகொடுத்த பெருந்துயரத்தில் மக்கள் - படம்| AP
பகிர்:

காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில், காஸாவில் உணவின்றி தவிக்கும் பாலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது சர்வதேச சமூகத்தில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஸாவுக்குச் செல்லும் உணவுகள் உள்பட பிற பொருள்கள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தை மீறி மக்களுக்குச் சென்றடைவது பெருமளவில் தடைபட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகையில், போதிய உணவின்றி தவிப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் 66 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர்.

போர் குற்றச் செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதையே இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாகவும், மக்களை உணவுக்கக தவிக்கச் செய்து அதனால் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நிகழ்த்த இஸ்ரேல் காய் நகர்த்துவதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

காஸாவில் 21 மாதங்களாக நீடிக்கும் சண்டைக்கு தீர்வாக, அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்படிக்கையாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபடச் சொல்லியிருப்பதால் விரைவில் அப்பகுதியில் அமைதி நிலைநாட்டப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments