முகப்பு
உலகம்

உலக புகழ்பெற்ற நரூட்டோ, ஒன் பீஸ் தொடர்களின் அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்!

அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்.

Updated On : 20 மார்ச் 2025, 1:27 pm IST
நரூட்டோ, ஒன் பீஸ் தொடர்களின் அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்
பகிர்:

ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற அனிமே தொடர்களின் அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்.

உலகம் முழுக்க அனிமே தொடர்களுக்கென சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் காமிக்ஸ் மற்றும் அனிமே தொடர்களில் புகழ்பெற்ற ஒன் பீஸ், நருட்டோ ஷிப்புடென், பொருட்டோ போன்ற கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த ஜப்பானிய அனிமேட்டரும் இயக்குநருமான ஷிகேகி அவாய் (71) நேற்று (மார்ச் 19) காலமானார்.

Advertisement

Advertisement

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனிமே துறையில் இவர் பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற பல அனிமே தொடர்களுக்கு அனிமேட்டராக இருந்த இவர் 500-க்கும் மேற்பட்ட அனிமேக்களில் பங்களித்துள்ளார்.

இதையும் படிக்க | எம்புரான் டிரைலர்!

மேலும், ஒன் பஞ்ச் மேன், பைபிளேடு, ஃபுட் வார், டோக்கியோ அண்டர்கிரௌண்ட் ஆகிய அனிமே தொடர்களை இயக்கியுள்ளார். அட்டாக் ஆன் டைட்டன்ஸ் தொடரிலும் சில அத்தியாயங்களில் அனிமேட்டராக பணியாற்றினார்.

இவரது மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள அனிமே ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் இறப்பதற்கு முன்பு தி மிஸ்ஃபிட் ஆஃப் டீமன் கிங் - 2, உசுமாகி, டெர்மினேட்டர் ஜீரோ, சூசைடு ஸ்குவாட் போன்ற தொடர்களில் அனிமேட்டராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments