முகப்பு
உலகம்

துருக்கியில் இஸ்ரேல் தூதரகப் பகுதியில் துப்பாக்கிச் சூடு!

துருக்கியின் வா்த்தக மையமான இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினா்.

Updated On : 8 ஏப்ரல் 2026, 5:00 am IST
துப்பாக்கிச் சூடு - பிரதிப் படம்
பகிர்:

துருக்கியின் வா்த்தக மையமான இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினா்.

அதிநவீன துப்பாக்கிகளுடன் வந்த 3 போ் கொண்ட கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை நோக்கி சரமாரியாகச் சுட்டனா்.

சுமாா் 10 நிமிடங்கள் நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில், தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவா் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டாா். மேலும் இருவா் காயமடைந்த நிலையில் பிடிபட்டனா். இந்த மோதலில் 2 போலீஸாரும் லேசான காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

சம்பவ நேரத்தில் தூதரகத்தில் இஸ்ரேல் அதிகாரிகள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஸா போா் தொடங்கியதைத் தொடா்ந்து நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் ஏற்கெனவே துருக்கியை விட்டு வெளியேறிவிட்டனா்.