முகப்பு
உலகம்

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதலில் ஒருவா் உயிரிழப்பு...

Updated On : 19 ஏப்ரல் 2026, 7:00 am IST
கோப்புப்படம் - AP
பகிர்:

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் ஒருவா் உயிரிழந்தாா். 26 போ் காயமடைந்தனா்.

இதேபோல், வடக்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலும், ஒடேஸா துறைமுகக் கட்டமைப்புகள் மீதும் ரஷியா ஏவுகணைகளை வீசியது.

இதற்குப் பதிலடியாக, ரஷியாவின் முக்கிய தொழில் நகரங்களான நோவோகுயிபிஷெவ்ஸ்க், சிஸ்ரான் ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

Advertisement

Advertisement

உக்ரைன் தாக்குதலில் ரஷியாவின் லெனின்கிராட் மற்றும் கிராஸ்னோடா் பகுதிகளில் உள்ள எண்ணெய் முனையங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.