FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமானது: டொனால்ட் டிரம்ப்

ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம்: எக்ஸ்.
பகிர்:

ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத்சோசியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்பது ஈரானில் உள்ள அணுத்துகள் தளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்க மேற்கொண்ட ஒரு நடவடிக்கை. அதை அங்கிருந்து தோண்டி எடுப்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான வேலையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

யுரேனியம் செறிவூட்டல் என்பது அணு ஆயுதங்கள் மற்றும் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை உருவாக்கும் முறை.

Advertisement

Advertisement

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிலுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ’அணுத்துகள்’ என்றே குறிப்பிடுகிறார். அணுகுண்டு தயாரிப்பதற்காக ஈரான் இந்த யுரேனியத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் பதுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் வெளியுறவு அமைச்சகம் மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவுக்கு மாற்றுவோம் என்று தெரிவித்து வருகிறார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் காரணம் காட்டியே அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பிப்ரவரி 28 முதல் போர் தாக்குதல்களைத் தொடங்கினர்.

இஸ்ரேலால் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட போர் 12 நாள்களில் முடிவடைந்த நிலையில், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

மேலும், தற்போது நடைபெற்ற போரில் யுரேனியம் செறிவூட்டல் ஆலை உள்பட ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

summary

Trump says recovering Iran uranium will be a difficult process

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments