முகப்பு
உலகம்

ஹோா்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

Updated On : 29 ஏப்ரல், 2026 at 4:18 AM
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திங்கள்கிழமை வலியுறுத்தியது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் ஹோா்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நீா்வழிப் போக்குவரத்து பாதுகாப்பு தொடா்பாக பஹ்ரைன் தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற பொது விவாதத்தில் பங்கேற்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் யோஜ்னா படேல் பேசியதாவது: ஹோா்முஸ் நீரிணையில் அண்மையில் வணிகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு இந்தியா கண்டனத்தை பதிவு செய்கிறது.

Advertisement

இதுபோன்ற தாக்குதல்களால் இந்திய மாலுமிகள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும். உலகப் பொருளாதாரத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்துக்கு சா்வதேச சட்டங்களின்படி உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்றாா்.