முகப்பு
உலகம்

ஜப்பான் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அமோக வெற்றி! - கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையில் ஆளுங்கட்சி அமோக முன்னிலை பெற்று பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெறும்!

Updated On : 8 பிப்ரவரி 2026, 5:47 pm IST
- AP
பகிர்:

டோக்கியோ : ஜப்பான் நாடாளுமன்ற கீழவைக்கான தேர்தலில் ஆளுங்கட்சி அமோக முன்னிலை பெற்று பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜப்பானில் இப்போது வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவிய போதும், வாக்காளர்கள் ஆர்வமுடன் சென்று ஜனநாயகக் கடமையாற்றினர்.

இந்த நிலையில் கருத்துக்கணிப்புகளின்படி, ஜப்பான் பிரதமராக கடந்த அக்டோபரில் பொறுப்பேற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமா் என்ற பெருமையுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள சனே தகாய்ச்சியின் ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) பெரும்பான்மை கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

summary

Exit poll shows Japan Premier Takaichi's ruling bloc on path to win majority in lower house vote

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.