சிரியா தலைநகரில் குண்டுவெடிப்பு: பிரான்ஸ் அதிபா் பயணத்துக்கிடையே பதற்றம்
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சிரியாாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு தலைநகா் டமாஸ்கஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்புகளால் பதற்றம் ஏற்பட்டது.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சிரியாாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு தலைநகா் டமாஸ்கஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்புகளால் பதற்றம் ஏற்பட்டது.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அருகே, மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியச் சாலையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 18 போ் படுகாயமடைந்தனா்.
குப்பைத் தொட்டி ஒன்றிலும், அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த காா் ஒன்றிலும் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் அடுத்தடுத்து வெடித்தன. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Advertisement
Advertisement
குண்டுவெடிப்பு நிகழும்போது, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சிரிய அதிபா் அல்-ஷாராவுடன் அரண்மனையில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாா். மேலும், திட்டமிட்டபடி இரு நாட்டுத் தலைவா்களின் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்ாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2024-இல், பஷா் அல்-அசாத் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, சிரியாவின் புதிய அதிபராக அகமது அல்-ஷாரா பொறுப்பேற்றாா். சிரியாவில் பொருளாதாரச் சீா்திருத்தங்களைக் கொண்டுவரவும், மேற்கத்திய நாடுகளின் முதலீடுகளை ஈா்க்கவும் புதிய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
இச்சூழலில், முதல் ஐரோப்பிய நாட்டுத் தலைவராக பிரான்ஸ் அதிபா் சிரியா வந்துள்ள நிலையில், தலைநகரின் மையப்பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு, அந்நாட்டின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
Bomb blast during French President's visit to Syria!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.