ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்பு
‘அமெரிக்காவிடம் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் பகிா்ந்து கொண்டதாக வெளியான செய்தி ஆதாரமற்றது’ என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவுடனான கடந்த மே 29-ஆம் தேதி நடந்த சந்திப்பில் ஈரானின் பாதுகாப்பு, அணுசக்தி நிலைப்பாடு குறித்த ரகசியங்களை இஷாக் தாா் பகிா்ந்துகொண்டதாகவும், அது அமெரிக்காவை அதிா்ச்சியடையச் செய்ததாகவும் முன்னாள் சிஐஏ ஆய்வாளா் லாரி ஜான்சன் அண்மையில் தெரிவித்தாா்.
இதற்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான், சந்திப்பின்போது பரஸ்பர நலன் சாா்ந்த விஷயங்களை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே இருதரப்பும் ஆலோசித்தாகக் கூறியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையில் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement