தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்.
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்களால் ஆடிப்போன ஈரானின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, பல ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டைக்கு நேற்று (மார்ச் 23) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
அடுத்த ஐந்து நாள்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், ஈரானில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் சேர்ந்து கூட்டுத்தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. முதற்கட்டத் தகவலின்படி இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
போரை நிறுத்துவது தொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இஸ்பஹான் நகரில் உள்ள எல்பிஜி நிர்வாகக் கட்டிடம், கோர்ரஷஹர் நகரில் உள்ள எரிவாயுக் குழாய் குறிவைக்கப்பட்டு தகவல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படைக்கு நெருக்கமான செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இயற்கை எரிவாயுக் குழாய் நிலையத்திற்கு வெளியே உள்ள பகுதியில் ஒரு ஏவுகணைகள் தாக்கியதாகவும், இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கோர்ரஷஹர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மீண்டும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
The report by the Fars news agency appeared timed to call into question comments by US President Donald Trump, who extended his deadline for Tehran to halt its attacks that have effectively closed the Strait of Hormuz, the narrow mouth of the Persian Gulf. Trump had threatened to strike Iranian power plants.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.