போரில் வெற்றி.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் உறுதி! - டிரம்ப்
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளதைப் பற்றி...
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்களால் ஆடிப்போன ஈரானின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, பல 40-க்கும் மேற்பட்ட ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டைக்கு நேற்றுமுன் தினம் (மார்ச் 23) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
Advertisement
Advertisement
அடுத்த ஐந்து நாள்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நான் இதை முன்கூட்டியே சொல்ல விரும்பவில்லை, ஆனால், அவர்கள் (ஈரான்) ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க மாட்டார்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்கள் அமெரிக்காவுக்கு விலைமதிப்புமிக்க பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளனர். ஈரானுடனான போரில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். ஈரானின் ராணுவத்தளவாடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஈரானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை இவ்வளவு விரைவாக முடிவடைந்தது குறித்து பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஷேத் ஏமாற்றமடைந்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான போர் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்” என்றார்.
இருப்பினும், அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது.
அதேநேரத்தில், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்குக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Amid ongoing negotiations to end the Iran war, US President Donald Trump said Tuesday that Tehran made a major concession and agreed to never build nuclear weapons, doubling down on a claim he has made before.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.