முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா - ஈரான் போர்? டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா - ஈரான் போர் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது பற்றி...
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவுக்கு வந்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்க படைகள் பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதலைத் தொடங்கிய நிலையில், இரு நாட்டுக்கும் இடையில் 3 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளெல்லாம் தோல்வியிலேயே முடிந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தை தொடர்பாக கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, பஹ்ரைன், குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது, "ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது.
ஐரோப்பாவில் இன்னும் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த நிகழ்வில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
Ended war with Iran, peace deal by weekend, says US President Donald Trump
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.