முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ்: மாயோன் எரிமலைச் சாம்பல் வெளியேற்றத்தால் பாதிப்பு

பிலிப்பின்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மாயோன் எரிமலையில் இருந்து கடந்த வாரஇறுதியில் பெருமளவில் எரிமலைச் சாம்பல் வெளியேறியது.

Updated On : 5 மே 2026, 4:28 am IST
எரிமலைச் சாம்பல்
பகிர்:

பிலிப்பின்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மாயோன் எரிமலையில் இருந்து கடந்த வாரஇறுதியில் பெருமளவில் எரிமலைச் சாம்பல் வெளியேறியது.

எரிமலையின் தென்மேற்கு சரிவில் தேங்கியிருந்த எரிமலைக் குழம்புப் படிமங்கள் திடீரென சரிந்து விழுந்ததால், அடா் சாம்பல் மூட்டம் அப்பகுதியில் உள்ள 87 கிராமங்களைச் சூழ்ந்தது.

அதிருஷ்டவசமாக, இந்த இயற்கைச் சீற்றத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments