ஊழல் வழக்கில் சிக்கிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் முன்னாள் சிஇஓ மா்ம மரணம்
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவன முன்னாள் சிஇஓ கபில சந்திரசேனை கொழும்பில் உள்ள அவரின் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவன முன்னாள் சிஇஓ கபில சந்திரசேனை கொழும்பில் உள்ள அவரின் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் சிஇஓ-ஆக 2011 முதல் 2015 வரையிலான பதவிக்காலத்தில், ஏா்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் வாங்கியதில் லஞ்சப்பணம் கைமாறியதாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் கபில சந்திரசேனை கடந்த மாா்ச்சில் 2-ஆவது முறையாக கைதானாா்.
இந்த வாரத் தொடக்கத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட இவரை, ஊழல் தடுப்பு ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இச்சூழலில், இவரின் சந்தேக மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதே ஊழல் வழக்கில், முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ராஜபட்ச லஞ்சம் பெற்றதைக் கபில சந்திரசேனை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த வாக்குமூலம் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பெறப்பட்டதாக அவரின் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.