ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸுக்கு விமானங்கள் வாங்கியதில் ஊழல்: ராஜபட்சவுக்கு சம்மன்
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்கள் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தொடா்பாக, அந்நாட்டின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன்
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு 2014-2017 காலகட்டத்தில் விமானங்கள் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தொடா்பாக, அந்நாட்டின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் முன்னாள் சிஇஓ கபில சந்திரசேனை, ராஜபட்ச ரூ. 6 கோடி (இலங்கை மதிப்பில்) லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கபில சந்திரசேனைக்கு செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக அவரின் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.