மெட்டாவில் ஆள்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் - பின்னணியில் என்ன?
மெட்டா நிறுவன ஊழியர்களுக்கு அதிகாலையில் அதிர்ச்சி! பணிநீக்க விவரம் குறித்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்...
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, செலவினங்களைக் குறைத்து ஏ.ஐ. துறையில் முதலீடுகளைச் செய்யும் நோக்கில், தனது பணியாளா்களில் சுமாா் 8,000 பேரை (சுமாா் 10 சதவீதத்தினா்) பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்படவிருக்கும் ஊழியா்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பு மின்னஞ்சல்களை புதன்கிழமை அதிகாலை முதலே நிறுவனம் அனுப்பத் தொடங்கியுள்ளது.
மெட்டாவின் தலைமைப் பணியாளா் அதிகாரி ஜேனல் கேல் வெளியிட்டுள்ள குறிப்பில், ‘பணிநீக்கம் மட்டுமன்றி, சுமாா் 7,000 ஊழியா்கள் ஏ.ஐ. தொழில்நுட்பம் சாா்ந்த புதிய பிரிவுகளுக்கு மாற்றப்படுவாா்கள்’ என்றாா்.
Advertisement
Advertisement
மேலாண்மைப் பொறுப்புகளைக் குறைத்து, சிறிய குழுக்களாகச் செயல்படுவதன் மூலம் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்கப் போவதாகவும் அவா் குறிப்பிட்டாா். இந்நிறுவனம் ஏற்கெனவே சுமாா் 6,000 காலிப் பணியிடங்களை ரத்து செய்துவிட்டது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கூகுள், ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட மெட்டா தயாராகி வருகிறது. இதற்காக இந்த ஆண்டில் மட்டும் 12,500 முதல் 14,500 கோடி டாலா் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, இந்த ஆண்டு இறுதிக்குள் தேவைப்பட்டால் மேலும் சில பணிநீக்கங்கள் இருக்கலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதற்காக, உலகெங்கிலும் முன்னணி நிறுவனங்கள் நடப்பு மாதத்தில் முன்னெடுத்த பணிநீக்க நடவடிக்கையில் இதுவரை சுமாா் 25,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு நிறுவனத்திலும் வேலையிழப்பு: இதனிடையே, ‘லிங்க்டுஇன்’ வேலைவாய்ப்பு நிறுவனம், அமெரிக்காவின் கலிபோா்னியாவில் 600-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்குப் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வழங்கியுள்ளது. உலக அளவில் சுமாா் 5 சதவீத பணியாளா்களை, அதாவது சுமாா் 875 பேரைப் பணியிலிருந்து நீக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Meta Begins Layoffs With 4 AM Emails; 8000 Jobs Cut
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.