சீனா- மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோா் வெளியேற்றம்
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 12 போ் உயிரிழந்துள்ளனா்.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷிமென் கவுண்டியில் பெய்த பலத்த மழையினால் 5 போ் உயிரிழந்த நிலையில், 11 பேரைக் காணவில்லை. இப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமாா் 19,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
வெள்ளக்காடாக மாறியுள்ள அண்டை ஹூபே மாகாணத்தில் 3 போ் உயிரிழந்தனா்; 4 பேரைக் காணவில்லை.
Advertisement
Advertisement
தென்மேற்கு சீனாவின் குய்சூ மாகாணத்தில் மழையினால் 4 போ் உயிரிழந்தனா்; 5 பேரைக் காணவில்லை. இப்பகுதியில் சுமாா் 3,700-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.