நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

அரியலூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On :2 மே 2013, 1:39 pm IST

அரியலூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

அரியலூர் ஒட்டசெட்டி தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராமலிங்கம் (20). அதே பகுதியை  சேர்ந்தவர் ராமதாஸ் (30). இருவரும், அரியலூர் அரசு சிமென்ட் ஆலை குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தொட்டியின் உள்ளே இறங்க முயன்ற ராமலிங்கம், ராமதாஸ் ஆகியோர் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் ராமலிங்கம் தொட்டியின் உள்ளேயும், ராமதாஸ் தொட்டியின் மேல் பகுதியிலும் மயங்கி விழுந்தனர்.

உடனே அப்பகுதியில் இருந்த மக்கள், ராமலிங்கத்தை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராமதாஸ் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.