மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பிரதோஷமும் நந்தியும்

ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் நந்தியையும் நாயகனாம் சிவபெருமானையும் வழிபட்டு வந்தால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழி பிறக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 1:51 pm

 ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் நந்தியையும் நாயகனாம் சிவபெருமானையும் வழிபட்டு வந்தால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழி பிறக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.


 திங்கள்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் மனச்சஞ்சலங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். நல்லெண்ணங்கள் உருவாகும்.


 செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் உணவுப்பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும் உதிரி வருமானங்களும் பெருகும்.


 புதன் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் புத்திர விருத்தியும் ஆண் சந்தான பாக்கியமும் கிட்டும். 


 வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் படிப்புத் தடை அகலும். கல்வி ஞானம் பெருகும். மதிநுட்பத்தினால் மகத்துவம் காண்பீர்கள்.


 வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் பகை விலகும். பாசம் கூடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


 சனிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.


 எல்லா பிரதோஷங்களிலும் வழிபாடு செய்வது இனிமையான வாழ்க்கையை ஏற்படுத்தி தரும். நல்ல வாழ்க்கை அமைய நந்தியை நாடுவது நல்லது.


 பிரதோஷத்தன்று நந்தியை வழிபட்டால் நலன்களும் வளங்களும் கிடைக்கும். பதினோறு பிரதோஷங்கள் தொடர்ந்து பூஜிப்பவர்களுக்கு சகல யோகங்களும் வந்து சேரும். 


 எட்டு பிரதோஷங்கள் தொடர்ந்து விரதமிருந்து நந்திபெருமானை வழிபடுவதன் மூலம் மறுபிறவி இல்லை என்பர்.


 எனவே, பெருமை மிகுந்த பிரதோஷ நாளை மனதில் பதித்துக்கொண்டு வழிபடுவதால் வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.