மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

எதிர்காலம் சிறப்பாக அமையும்

என் மளிகை வியாபாரம் எவ்வாறு நடக்கும்? எங்கள் குடும்ப எதிர்காலம் எவ்வாறு அமையும்? இறந்த மூதாதையர்கள் கனவில் வருவது நல்லதா? 

Updated On :24 ஜூலை 2020, 12:30 am

என் மளிகை வியாபாரம் எவ்வாறு நடக்கும்? எங்கள் குடும்ப எதிர்காலம் எவ்வாறு அமையும்? இறந்த மூதாதையர்கள் கனவில் வருவது நல்லதா? 

வாசகர் .... 

உங்களுக்கு ரிஷப லக்னம், ரேவதி நட்சத்திரம், மீன ராசி. லக்னம், ஆறாமதிபதி ஆறாம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் (ஒரு கேந்திராதிபதி ஒரு திரிகோணாதிபதி) களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தர்மகர்மாதிபதியான சனிபகவான் நான்காம் வீட்டில் அமர்ந்து பத்தாம் வீட்டைப் பார்வை செய்கிறார். அஷ்டம லாபாதிபதியான குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ஆறாம் வீட்டிலுள்ள சுக்கிர பகவானையும், ஏழாம் பார்வையாக தன் ஆட்சி வீடான எட்டாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் பார்வை செய்கிறார். சனி, குரு பகவான்களின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படிவதால் இறுதிவரை செய்தொழில் முன்னேற்றமாக அமையும். தற்சமயம் சுகாதிபதியின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நல்ல வளர்ச்சி உண்டாகும். முன்னோர்கள் கனவில் வருவது குறையல்ல; அவர்களின் ஆசி என்று எடுத்துக்கொள்ள வேண்டும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.