
வார பலன்கள் (செப். 3 - 10) - மீனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வியாபாரிகள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் ஆரோக்கிய பயிர் செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்பொழுது கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
பெண்களுக்கு உடன்பிறந்தோர் நட்புக்கரம் நீட்டுவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பேச்சைக்கேட்டு நடந்துகொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






