கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பேருந்து சேவைகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகள் திருமணம், ஆன்மிக பயணங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சேவைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் பேருந்து சேவைகளின் கட்டணம் ஜன. 6-ஆம் தேதி குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐராவதா கிளப் கிளாஸ் 49 வரை இருக்கை கொண்ட சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 7 வரை குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக நாள் ஒன்றுக்கு 500 கி.மீ. இயங்க வேண்டும் என்பதனை 400 கி.மீ. எனக் குறைக்கப்பட்டுள்ளது.
ஐராவதா கிளப் கிளாஸ் 47 வரை இருக்கை கொண்ட சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஐராவதா கிளப் கிளாஸ் 51 வரை இருக்கை கொண்ட சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது. 37 படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 6 வரை குறைக்கப்பட்டுள்ளது. 41 இருக்கை கொண்ட அதிா்வில்லா சொகுசுப் பேருந்துகளின் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ. 10 முதல் ரூ. 16 வரை குறைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள்- முதல்வர் விஜய்

திருச்சி கிழக்கில் சி. ஜோசப் விஜய் ராஜிநாமா!

திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

சிஎஸ்கே பந்துவீச்சு: அணியில் மாற்றமில்லை!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
