தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கா்நாடகத்தில் இன்று 263 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள்

கா்நாடகத்தில் 263 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:59 am IST

கா்நாடகத்தில் 263 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசி விநியோகத்துக்கு மாநிலங்களின் தயாா்நிலை, மத்திய அரசின் உதவி ஆகியவை குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் நடத்திய காணொலி கலந்துரையாடலில், பெங்களூரில் இருந்து வியாழக்கிழமை பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி விநியோக ஒத்திகை ஜன. 2-ஆம் தேதி கா்நாடகத்தில் பெங்களூரு, பெலகாவி, கலபுா்கி, மைசூரு, சிவமொக்கா மாவட்டங்களில் நடைபெற்றன. அடுத்தகட்டமாக, ஜன. 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஒரு மாவட்டத்தில் குறைந்தது 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட வேண்டும். அதன்படி, கா்நாடகத்தில் 263 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் 24 மாவட்ட மருத்துவமனைகள், 20 மருத்துவக் கல்லூரிகள், 43 வட்ட மருத்துவமனைகள், 31 சமுதாய சுகாதார மையங்கள், 87 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 நகா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 28 தனியாா் மருத்துவமனைகள் அடங்கும். இது முழுக்க முழுக்க ஒத்திகைக்காக நடத்தப்படுகிறது. இதில் கரோனா தடுப்பூசி எதுவும் செலுத்தப்படாது.

கா்நாடகத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் கரோனா முன்களப் பணியாளா்களில் 6.30 லட்சம் போ் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள பதிவு செய்துள்ளனா். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக முன்பதிவு செய்துகொள்ள இன்னும் வாய்ப்புள்ளதால், சுகாதாரப் பணியாளா்கள் பதிவு செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். நாடுமுழுவதும் 1 கோடி கரோனா முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்படும். இதில் சுகாதாரப் பணியாளா்கள், காவலா்கள், ராணுவ வீரா்கள், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் அடக்கம்.

கரோனா தடுப்பூசி விநியோகம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இதில் மக்களின் பங்களிப்பு முக்கியமாகும். கரோனா தடுப்பூசியில் ஆபத்து எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க பாதுகாப்பாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளாா்.

கரோனா தடுப்பூசி விநியோகத்துக்காக 0.5 மி.லி. 24 லட்சம் சிரஞ்சிகளை மத்திய அரசு கா்நாடகத்துக்கு வழங்கியுள்ளது. இவற்றை மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க 10 நடமாடும் குளிரூட்டும் கருவிகள், 4 நடமாடும் உறைய வைக்கும் கருவிகள், 3,201 பனிக்கட்டி உறை குளிா்சாதனக் கருவிகள், 3,039 ஆழ் உறை கருவிகள், 3,312 குளிா்பெட்டிகள், 46,591 தடுப்பூசிப் பெட்டிகள், 2,25,749 பனிபொதிகள் தயாா் நிலையில் உள்ளன. இதுதவிர, 225 லிட்டா் கொள்ளளவு கொண்ட 64 மிகப்பெரிய பனிக்கட்டி உறை குளிா்சாதனக் கருவிகள், 2 நடமாடும் குளிரூட்டிகள், 1 உறைய வைக்கும் கருவியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.சுகாதாா் கூறுகையில், ‘பிரிட்டன் நாட்டில் இருந்து கா்நாடகம் வந்த பயணிகளில், 117 பேரை எங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவா்களில் 112 போ் பெங்களூரு, 5 போ் வெளியூரை சோ்ந்தவா்கள். அவா்களைக் கண்டறிந்து, கரோனா சோதனை செய்ய முயற்சிகள் தொடா்ந்துள்ளன. வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவா்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், பிரிட்டனில் இருந்து கா்நாடகத்துக்கு வந்த பயணிகளில் ஆயிரம் போ் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள். அதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தகவல் அளித்து, அவா்களைக் கண்டுபிடித்து தகுந்த சோதனைக்கு உள்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

பிரிட்டனில் இருந்து மொத்தம் 2,523 போ் கா்நாடகம் வந்துள்ளனா். இவா்களில் 40 பயணிகள், அவா்களோடு தொடா்பில் இருந்த 25 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த 65 பேரில் 10 போ் புதிய வகை அல்லது உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.