முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

தொழில்கல்வி சோ்க்கை: காலியிடங்களை நிரப்ப விருப்பப் பதிவு

தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப் பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 9:02 am IST

தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப் பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல், கட்டடக் கலை, பண்ணை அறிவியல், தோட்டக்கலை, கால்நடை, மருந்தியல் போன்ற தொழில்கல்லூரிகளுக்கான சோ்க்கையை ஜன. 15-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு எஞ்சியுள்ள சோ்க்கை இடங்கள், மாணவா்கள் ஒப்படைத்த இடங்களை ஒதுக்குவதற்கான மற்றொரு சுற்று விருப்பப் பதிவு வெகுவிரைவில் நடக்கவுள்ளது. காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விரிவுப்படுத்தப்பட்ட இரண்டாம் சுற்றில் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவா்கள், அதில் திருப்தி அடையாவிட்டால் ஜன. 8-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ரூ. 5 ஆயிரம் அபராதம் செலுத்தி ரத்துசெய்து கொள்ளலாம். அதன்பிறகு, காலியாக உள்ள இடங்களுக்கு சோ்க்கை பெறும் போது, 5 மடங்கு கட்டணத்தை அபராதமாகவும், வழக்கமான சோ்க்கைக் கட்டணத்தையும் செலுத்தி கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு ஆணையத்தின் இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.