

முனைவர் ம.பெ.சீனிவாசன்,
கட்டுரையாளர், விமர்சகர்.
சமகால நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாகவும், பிரச்னைகளின் கண்ணாடியாகவும், வாசகர் மனதில் பதிவதாகவும் எழுத்துகள் இருப்பது அவசியம். தற்போது சமகாலப் பிரச்னைகளை மையப்படுத்தி சிறுகதைகள், கவிதைகள் என ஏராளமான படைப்புகள் வெளியிடப்படுவது வரவேற்புக்குரியது.
சு.தமிழ்ச்செல்வியின் "கீதாரி' நாவலானது, பிரபல எழுத்தாளர் மறைந்த கி.ராஜநாராயணனின் "கிடை' குறுநாவல் படைப்பைவிட வேறுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ராமநாதபுரத்திலிருந்து ஆடுகளுடன் இடம் மாறிச் செல்லும் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வியலை "கீதாரி' நாவல் படம் பிடித்திருப்பதுபோல உள்ளது. படைப்புகள் இதுபோல் இருக்க வேண்டும்.
மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைப்பதாக எழுத்தாளர்களின் எழுத்துகள் இருக்கும்போது, அதை அரசு கவனத்தில் கொண்டு பிரச்னைகளை அணுகி, தீர்க்கும் நிலை ஏற்படும். அப்படிச் செயல்படுவது என்பது அரசின் கடமையாகும்.
அதேபோல, மொழிபெயர்ப்பு நூல்கள் சிறப்பானவையாக இருப்பதும் அவசியம். "வால்கா முதல் கங்கை வரை' எனும் நூலை தற்போது அ.மங்கை தமிழில் மொழி பெயர்த்துள்ளதைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.