ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு மேலும் ரூ.224 குறைந்துள்ளது. இதையடுத்து, சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 288-க்கு விற்பனையானது.
கடந்த 3 நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.816 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவடைந்து வருவதால், இந்திய சந்தையில் அதன் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை சரிவடைந்ததன் எதிரொலியாக வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 1095 குறைந்து, ரூ. 41 ஆயிரத்து 285-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை மார்க்கெட் நிலவரம்:-
ஒரு கிராம் தங்கம் - ரூ.2536
ஒரு பவுன் தங்கம் - ரூ.20288
ஒரு கிராம் வெள்ளி - ரூ.44.20
ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.41285
வியாழக்கிழமை மார்க்கெட் நிலவரம்:-
ஒரு கிராம் தங்கம் - ரூ.2564
ஒரு பவுன் தங்கம் - ரூ.20512
ஒரு கிராம் வெள்ளி - ரூ.45.30
ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.42380
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?







