ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் அசத்தும் சாம்சங் நிறுவனம்

அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன்கள் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது
ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் அசத்தும் சாம்சங் நிறுவனம்
ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் அசத்தும் சாம்சங் நிறுவனம்

அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன்கள் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் தரத்திலும் தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனம் தற்போது மடிக்கக்கூடிய வகையில்  ஸ்மார்ட்போன்கள் தயாரித்து விற்பனையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் 90 லட்சம் மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததோடு ஒட்டுமொத்த சந்தையில் 88 சதவீத பங்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறது என்று கவுன்ட்டர் பாயிண்ட் நிறுவனம் ஆய்வில் தெரிவித்திருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்களின் வர்த்தகம் வரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் என்றும் அதற்கு ஏற்றது போல தரமும் , வடிவத்தையும் நியாமான விலையையும் கொண்டிருக்கிறது என தெரிவித்தனர்.

மேலும் , 2023 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டின் விற்பனையை விட 10 மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் அடுத்ததாக மற்ற நிறுவனங்களும் மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யத் தொடங்குவார்கள். ஆப்பிள் நிறுவனம் அதற்கான முயற்சியில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது என்று ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.   

தென் கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் அந்நாட்டில் பெரிய விற்பனையையும் செய்திருக்கிறார்கள். நிறுவனத்தின் தனித்துவமான புதிய படைப்பான  சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3 ,கேலக்ஸி இசட் பிலிப் 3 சாதனங்களை அடுத்த வாரம் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

நவீன வசதிகளுடன் 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சாம்சங் நிறுவனம் கடந்த காலாண்டில்  8 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது. தற்போது இரண்டாம்  காலாண்டின் பாதிக்குள்ளாகவே   6 கோடி மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து 90 சதவீத விற்பனையை இப்போதே உறுதி செய்திருக்கிறார்கள்.   

இதுகுறித்து சந்தை ஆய்வாளர் பார்க் ஜின் சுக் " சாம்சங் நிறுவனம் மடிக்கும் ஸ்மார்ட்போன்களைக் கொண்டு பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. மலிவான விலையில் இத்தனை வசதிகளுடன் இருப்பதே அதன் விற்பனை சாத்தியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. தற்போது சீனாவில் சாம்சங் நிறுவனம் சிறிய அளவில் இருப்பதால் அடுத்ததாக அங்கு விலையைக் குறைத்து வளர முயற்சிக்கும் "என தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com