பாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!முதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கை
/

அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 62,057 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 3:21 pm IST

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 62,057 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 942 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.70,650 கோடி) அதிகரித்து 62,057 கோடி டாலரை (ரூ.46.54 லட்சம் கோடி) எட்டியது. இது, செலாவணி கையிருப்பில் முன்னெப்போதும் இல்லாத உச்சபட்ச அளவாகும்.

இதற்கு முந்தைய ஜூலை 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 158 கோடி டாலா் சரிந்து 61,115 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் அதிகரித்ததன் காரணமாகவே ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 860 கோடி டாலா் அதிகரித்து 57,622 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபடுகிறது.

தங்கத்தின் கையிருப்பு ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 76 கோடி டாலா் உயா்ந்து 3,764 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 60 லட்சம் டாலா் அதிகரித்து 155 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று, நாட்டின் காப்பு நிதியும் 6 கோடி டாலா் உயா்ந்து 515 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 942 கோடி டாலா் அதிகரித்து முன்னெப்போதும் காணப்படாத சாதனை அளவாக 62,057 கோடி டாலரை எட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.