மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதிய வசதியுடன் வெளிவரும் ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன்

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய பாதுகாப்பு வசதியை உருவாக்கியிருகிறார்கள்.

News image
புதிய வசதியுடன் வெளிவரும் ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன்
Updated On :27 ஆகஸ்ட் 2021, 8:58 am

DIN

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய பாதுகாப்பு வசதியை உருவாக்கியிருகிறார்கள்.

பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமான சூழலில் ஒருவரின் முகம் ஒருவருக்கு முழுதாக தெரிவதில்லை. இதைக்கொண்டு முகக்கவசம் அணிந்திருந்தாலும் 'முகத்தை அறியும்' வசதியை ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன் வழங்க இருக்கிறது.கடவுச் சொல்லைப்போல  'ஃபேஸ் டிடெக்சன்' எனப்படும் முகத்தை காட்டி உள் நுழைகிற வசதியை பல ஸ்மார்ட்போன்களும் கொண்டிருக்கிறது.

ஆனால் கரோனா காலத்திற்கு பின் முகக்கவசத்தை எடுத்த பின்பே முகத்தை காட்ட முடியும் என்பதால் இந்த வகை பாதுகாப்பை பொதுவெளியில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது முகக்கவசத்தையும் கண்ணாடியையும் எடுக்காமலே நம் முகத்தை அறியும் புதிய வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் அன்று சந்தையில் அறிமுகமாகும் நிலையில் அதன் முக்கிய அம்சங்களை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

 ஐபோன் 13 சிறப்பம்சங்கள் : 

* புதிய ஃபேஸ் ஐடி 

* நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ 15 தொழில்நுட்பம் , 5எம்என் வேவ் லெந்த் 

*ஸ்னாப் ட்ராகன் எக்ஸ் 60 5ஜி மோடம் 

*லிடார் சென்சார் 

* நீண்ட பாட்டரி வசதி 

ஐபோன் 12 யை விட மேலும் முன்னகர்ந்து  முக்கிய தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கிறது ஐபோன் 13 . 

இனி ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் பிற ஸ்மார்ட்போன்களிலும் இந்த முகக்கவசத்தை எடுக்காமல் முகத்தை அறிகிற 'ஃபேஸ் ஐடி' இடம்பெறும் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.