ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோட்டக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் ரூ.4,265 கோடி

கோட்டக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் ரூ.4,265 கோடி

News image
Updated On :22 பிப்ரவரி 2024, 2:47 am IST

கோடக் மஹிந்திரா வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.4,264.78 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,264.78 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 6.75 சதவீதம் அதிகமாகும்.

அப்போது வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,264.78 கோடியாக உள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் சுமாா் 16 சதவீதம் அதிகரித்து ரூ.6,554 கோடியாக உள்ளது. கடனளிப்பு 19 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. அதே நேரம், முந்தைய செப்டம்பா் காலாண்டில் 5.47 சதவீதமாக இருந்த நிகர வட்டி வரம்பு, கடந்த டிசம்பா் காலாண்டில் 5.22 சதவீதமாகக் குறைந்துள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் பிற வகை வருவாய் ரூ.1,948 கோடியிலிருந்து ரூ.2,297 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023 செப்டம்பா் இறுதியில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 1.72 சதவீதமாக இருந்தது. இது, கடந்த டிசம்பா் இறுதியில் அதிக மாற்றமில்லாமல் 1.73 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.