பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

4 ஆண்டுகளில் ரூ. 90 ஆயிரம் கோடி மதிப்பு! மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்!

Published On :

பிரபல குவாண்ட் மியூசுவல் பண்ட் நிறுவனத்தின் மதிப்பு உதிவேகமாக உயர்ந்ததால் செபி விளக்கம் கேட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தையை நம்பி பல மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவை, முதலீட்டாளர்களிடமிருந்து நிதிகளைத் திரட்டி அரசு, தனியார் நிறுவனங்கள், தங்கம் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து பங்குகளின் அன்றைய விலைகளைக் கணக்கிட்டு முதலீட்டாளர்களுக்கு லாபகரமான தொகையைத் திருப்பி அளிக்கும்.

அப்படி, நாட்டில் கவனிக்கப்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனமான குவாண்ட் கடந்த 2019 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி மதிப்புடன் இருந்துள்ளது. ஆனால், அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.90,000 கோடி மதிப்பை அடைந்துள்ளது. அதாவது, 900 மடங்கு என்கிற அசாத்திய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

Story image

மேலும், கடந்த 5 ஆண்டுகளில், ஆண்டிற்கு 45% லாபத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், குவாண்ட் நிறுவனத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என செபி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக செபி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் தயாராக இருக்கிறோம் என குவாண்ட் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற நிதியை பல சின்ன நிறுவனங்களில் அதிரடியாக முதலீடு செய்து அவற்றின் மதிப்புகளை ஏற்றினால் மட்டுமே இந்த அசாதாரண வளர்ச்சி சாத்தியம் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருவதுடன் இதுபோன்ற வளர்ச்சியால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.