தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

"ஆய்வுப் பணிகளை மாணவர்கள் மேற்கொள்வது கட்டாயமாக்கப்படும்'

வரும் கல்வியாண்டில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது

News image
Updated On :2 மார்ச் 2013, 5:43 am

வரும் கல்வியாண்டில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து கூறினார்.

காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஆராய்ச்சி தின விழாவில் அவர் மேலும் பேசியது:-

தற்போது உயர்கல்வி பெறும் மாணவர்களில் ஒரு சதவிகிதம் பேர்தான் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை ஆலோசகர் டாக்டர் எஸ்.ஆர்.ராவ் பேசும்போது, சீனா,கொரியாவை ஒப்பிடுகையில் ஆய்வுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் ஆய்வு நடவடிக்கைகள் அதிகரிக்க கட்டமைப்பு, முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் மாணவர்களின் ஆர்வமும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.

தேசிய விஞ்ஞான கழகத் தலைவர் கிருஷ்ணன்லால், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக இணை துணைவேந்தர் டி.பி.கணேசன், இயக்குநர் சி.முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.