இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதம் மற்றும் மனிதச் சங்கிலிப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைப் போரில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அதன் துணைத் தலைவர் ஆர்.முரளி, செயலாளர் எஸ்.அறிவழகன் மற்றும் பெண் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மனிதச் சங்கிலிப் போராட்டம்: இதற்கிடையே, தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று உயர் நீதிமன்றத்தை ஒட்டியுள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் வியாழக்கிழமை மதியம் வழக்குரைஞர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். இலங்கை அரசுக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைக் காத்திட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், அச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டம் காரணமாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


