விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சர்க்கரை நோய் எதிர்ப்பு மாத்திரை தடை நீக்கம்: மத்திய அரசிதழில் வெளியீடு

நாடு முழுவதும் சர்க்கரை நோய் எதிர்ப்பு மாத்திரை பயோகிளிட்டúஸôனுக்கு விதிக்கப்பட்டடிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 3:02 am IST

நாடு முழுவதும் சர்க்கரை நோய் எதிர்ப்பு மாத்திரை பயோகிளிட்டúஸôனுக்கு விதிக்கப்பட்டடிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

இந்த மருந்தின் தடை நீக்கத்துக்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை அரசிதழில் புதன்கிழமை (ஜூலை 31) வெளியிட்டுள்ளது.

சர்க்கரை நோய் எதிர்ப்பு மாத்திரை பயோகிளிட்டோúஸôன் காரணமாக சிறுநீர்ப் பை புற்று நோய் ஏற்படும் எனக் கருதி சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், மலிவான விலையுடன் அதிக ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய இந்த மாத்திரையை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் தடை விதிப்பது சரி அல்ல என்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் பயோகிளிட்டúஸôன் மாத்திரையின் பக்க விளைவுகள் குறித்து சிவப்பு எழுத்தில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த மாத்திரையை மீண்டும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்களின் ஆலோசனையுடன் சர்க்கரை நோயாளிகள் இந்த மாத்திரையைச் சாப்பிடுவதன் மூலம் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று சென்னையைச் சேர்ந்த சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.