விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வீடு கட்ட "கிரீன் சேனல்' அனுமதி: இன்று தொடக்கம்

"கிரீன் சேனல்' மூலம் கட்டட அனுமதியளிக்கும் முறையை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 3:01 am IST

"கிரீன் சேனல்' மூலம் கட்டட அனுமதியளிக்கும் முறையை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகராட்சியில் வீடு கட்ட மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். இப்போது இந்த அனுமதி வழங்க பல நாள்கள் ஆகின்றன என்று புகார் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் கட்டடங்களுக்கு அனுமதி கேட்போர், கட்டட வரைபடத்தில் விதிமுறை மீறப்படவில்லை என்றும், மீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உறுதியளிக்கும் முறையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பின்பற்றி வருகிறது. மேலும் இதன் மூலம் 7 நாள்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டுமான பணி தொடங்கிய பின்னர் கட்டடத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள், விதி மீறல் இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இது கிரீன் சேனல் முறை எனப்படுகிறது.

இந்த முறையை சென்னை மாநகராட்சியிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இணையதளம் மூலம் நடைமுறைப்படுத்தும் இந்த முறையை வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் மேயர் தொடங்கி வைக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.