சென்னை
கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இன்று இயங்காது
மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரம் ரயில்வே பணிமனையில் , ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா் மற்றும் அரக்கோணத்துக்கு வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்.
பயணிகள் வசதிக்காக, சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்கு, ஒரு ரயில் என 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.