நாடக நடிகராகவும் திரைப்பட நடிகராகவும் மக்களிடம் அறிமுகமாகியுள்ள பாரதி மணி, மாறா படம் தான் தனது கடைசிப் படம் என அறிவித்துள்ளார்.
1937-ல் பிறந்த பாரதி மணி, நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த பாரதி மணி, பிறகு திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 1992-ல் தி எலெக்ட்ரிக் மூன் என்கிற ஆங்கிலப் படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். பாரதி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்தார். ரஜினியின் பாபா படத்திலும் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்திலும் நடித்துள்ளார்.
மாதவன் நடித்துள்ள மாறா படம் அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது. அப்படத்தில் நடித்துள்ள பாரதி மணி, இதுவே எனது கடைசிப் படம் என ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இன்று திலீப்குமார் இயக்கிய 'மாறா' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. இது மலையாளத்தில் வெளிவந்த 'சார்லி'யின் தமிழாக்கம். இதில் நானும் ஒரு சின்ன வேடத்தில் வந்துபோயிருக்கிறேன். இனிமேல் படங்களில் நடிக்க உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்காது என்பதால் இதுவே என்னுடய கடைசிப் படம். படக்குழுவும் இயக்குநரும் என்னை இருபது நாள்கள் ஊட்டியில் பூப்போல கவனித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு என் நன்றி. நேரமிருப்பவர்கள் பார்த்து கருத்து சொல்லவும் என்று கூறியுள்ளார்.

எமி ஜாக்சனுடன் பாரதி மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










